பிரபல பாடகியை டேட்டிங் செய்யும் ஜஸ்டின் ட்ரூடோ? வைரலான புகைப்படங்கள்
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரியும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஜஸ்டின் ட்ரூடோ
கடந்த 28ஆம் திகதி ஜஸ்டின் ட்ரூடோவும் (Justin Trudeau), அமெரிக்க பிரபல பாடகி கேட்டி பெர்ரியும் (Katy Perry) உள்ளூர் உணவகமான Le Violonயில் காணப்பட்டனர்.
அங்கு அவர்கள் இருவரும் உணவைப் பகிர்ந்து கொண்டதும், காக்டெய்ல்களை அனுபவித்ததும் வெளியான புகைப்படங்கள் மூலம் தெரிய வந்தது.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில்
வைரலானதால் இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் பரவுகின்றன.
ஆனால், கேட்டி அல்லது ட்ரூடோவின் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
சந்திப்பு
இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உறுதிப்படுத்திய சிறிது நேரத்திலேயே அவர்களின் சந்திப்பு வந்துள்ளது.
அதாவது, நடிகர் ஆர்லாண்டோ ப்ளூம் உடனான உறவினைத் தொடர்ந்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனதை கேட்டி பெர்ரி சமீபத்தில் அறிவித்தார்.
அதேபோல் ஜஸ்டின் ட்ரூடோவைப் பொறுத்தவரை, அவரது மனைவி சோஃபி கிரிகோயரும் 18 ஆண்டு திருமணத்திற்குப் பிறகு ஆகத்து 2023யில் பிரிவதாக அறிவித்ததாக PEOPLE தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |