தாயின் பிறந்தநாளுக்கு கேக் ஆர்டர் செய்த பெண்: கேக் வந்தபோது...
இந்தியாவின் டெல்லியில் ஒரு பெண் தன் தாயின் பிறந்தநாளுக்கு கேக் ஆர்டர் செய்தார்.
ஆர்டர் செய்த கேக் வந்தபோது, கேக்கை பார்த்தவர்கள் அழுவதா சிரிப்பதா என திகைக்கும் நிலை ஏற்பட்டது!
கேக் வந்தபோது...
தன் தாய்க்காக கேக் ஆர்டர் செய்த அந்தப் பெண், கேக்கில் ‘Happy Birthday Mummy’ என்று ஐசிங் மூலம் எழுதவேண்டும் என்று குறிப்பிடும் வகையில், Text with frosting என்று தனது ஆர்டரில் குறிப்பிட்டிருந்தார்.
ஆர்டர் செய்த கேக் வந்தது. அந்தப் பெண் கேக் பார்சலைத் திறந்தபோது அதில் எழுதியிருந்த விடயத்தைக் கண்டு அழுவதா சிரிப்பதா என குழப்பமடைந்தார்.
காரணம், கேக்கில், Mummy, Text with frosting என எழுதப்பட்டிருந்தது!
அவர் அந்த கேக்கின் புகைப்படத்தை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டு, இப்படியும் ஒரு பேக்கரிக்காரர்கள் செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிட, அவரது இடுகை வைரலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |