அபூர்வமாக தென்பட்ட ஆள் காட்டி பறவைகள்! எந்த நாட்டில் தெரியுமா?
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில், அபூர்வமாக ஆள்காட்சி பறவைகள் தென்பட்டுள்ளதன் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கரையோறம் வாழும் பறவையினம் தான் லேப்விங்ஸ். இதை ஆள்காட்டி பறவை என்று கூட அழைப்பர். இந்த பறவை கருப்பு நிறத்தில் மூக்குடைய இந்த பறவை, மனிதர்களையோ அல்லது மற்ற எதிரி விலங்கினங்களையோ கண்டால் ஒலி எழுப்பி மற்ற பறவைகளுக்கும் தெரியப்படுத்தும்.
இதன் காரணமாக இந்த பறவை ஆள்காட்டி குருவி என்று அழைக்கப்படுகிறது. இப்பறவை தரையில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இது அதிகபட்சமாக 35 செ.மீற்றர் நீளம் வரை இருக்கும்.
ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒன்று போலவே இருக்கும். ஆனால் ஆண் பறவையின் இறக்கைகள் கொஞ்சம் நீண்டும், கால் மணிக்கட்டு சற்றே வெளியில் நீட்டியவாறும் இருக்கும். இவை பொதுவாக இணைகளாகவும் அல்லது சிறு குழுக்களாகவும் உழுத நிலங்களிலும், மேய்ச்சல் பகுதியிலும், நீர் நிலை அருகேயும் காணப்படுகின்றன.
இனப்பெருக்கம் அல்லாத குளிர் காலங்களில் இவை சுமார் 26 பறவைகள் முதல் 200 பறவைகள் வரை ஒன்றாக வசிக்கின்றன.
இந்நிலையில், இந்த பறவை ஐக்கிய அரபு அமீரகத்தில் தென்பட்டுள்ளது. அபுதாபி- துபாய் எல்லை பகுதி அருகே உள்ள அல் மஹா பைவோர் விவசாய பண்ணை அருகே இந்த பறவைகள் பறந்து செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது.
வெயில் காலம் தொடங்கினால் இந்த பறவை அங்கிருந்து சென்று விடும். இந்த அரிய வகை பறவை இனத்தை பாதுகாக்க அபுதாபி முகம்மது பின் ஜாயித் உயிரின பாதுகாப்பு நிதியத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.