செம கெத்தாக ஸ்டோக்ஸிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட பாண்ட் வீடியோ! வலுவான நிலையில் இந்தியா
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, ரிஷப் பாண்ட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இடையே நடந்த வாக்குவாதத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் நேற்று துவங்கியது.
இதில் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து இன்று ஆடிய இந்திய அணி, 329 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இப்போட்டியின் நேற்றைய 87-வது ஓவரின் போது, பாண்ட் மற்றும் ஸ்டோக்ஸ் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
Rishabh Pant vs Stokes fight today ???? pic.twitter.com/P8a0mbO5d1
— middle stump (@middlestump4) February 13, 2021
ஸ்டோக்ஸ் ஏதோ வார்த்தை கூறியதால், அவர் பேட்டிங் செய்ய மறுத்துவிட்டார். அதன் பின் நடுவர் குறுக்கிட, இதைத் தொடர்ந்து ஓவர் முடிந்த பின்பு, இருவரும் வாக்குவாததில் ஈடுபட்டனர்.
நடுவர்கள் உடனடியாக குறுக்கிட்டு இருவரையும் சமாதனப்படுத்தினர். இருவருக்கும் இடையே என்ன வாக்குவாதம் நடந்தது என்பது தெரியவில்லை, ஆனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பான்ட் பெயரை குறிப்பிட்டு கூச்சலிட்டனர்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.