கனடாவுக்கு எதற்காக வந்தீர்கள் என்ற கேள்விக்கு இளம்பெண் அளித்த பதில்: கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்...
கனடாவுக்கு கல்வி கற்க வந்த இந்திய மாணவி ஒருவரிடம் நீங்கள் எதற்காக கனடா வந்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இளம்பெண் அளித்த பதில்
இந்திய மாணவி ஒருவரிடம் நீங்கள் எதற்காக கனடா வந்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட, அதற்கு அவர் அளித்த பதிலைக் கேட்டு இணையமே விழுந்து விழுந்து சிரிக்கிறது.
அப்படி என்ன சொன்னார் தெரியுமா அந்த இளம்பெண்?
Sad that we don’t get to see sunrise and sunset in India.
— desi mojito ?? (@desimojito) July 30, 2023
Mudi ji rezine karo :) pic.twitter.com/ava07S4qw5
இந்தியாவை விட்டு வெளியேறுவது தனது கனவு என்றும், கனடாவில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்ப்பதே தனக்குப் பிடித்த விடயம் என்றும் தெரிவித்தார் அந்த பெண்.
கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்
அந்த இளம்பெண் பேசும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், அவரைக் கிழித்து தொங்கவிடாத குறையாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
அப்படியானால் இந்தியாவில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்க்கமுடியாதா என ஒருவர் கேள்வி எழுப்ப, மற்றொருவரோ, நான் ஒரு ஆண்டு கனடாவில் வாழ்ந்தேன், கோடை நன்றாக இருந்தது, ஆனால் குளிர்காலம் பயங்கரமாக இருந்தது என்கிறார்.
ஆக, இந்த பெண் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்ப்பதற்காகவே கனடா சென்றுள்ளார், ஆனால், நீங்கள் இந்தியாவில் உங்கள் வீட்டு மாடிக்குப் போனாலே சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்க்கமுடியுமே என ஒருவர் கூறுவதுடன், நீங்கள் நன்றாக கல்வி கற்றவராக இருந்தால் கனடாவை விட இந்தியாவில் வாழ்வதே மிகச் சிறந்தது என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |