லண்டனில் திடீரென பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள்
பிரித்தானியாவில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் சார்ஜ் போடப்பட்டிருக்கும் போது, பற்றி எரிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
@gettyimages
ஆனால் இந்த வாகனங்களில் லைவ் பேட்டரியை எடுத்துச் செல்வதால், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பராமரிக்க, இன்னும் நிறைய தொழில்நுட்ப முயற்சிகள் செய்ய வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது.
@91wheels
இந்த நிலையில் பிரித்தானியாவின் லண்டனிலுள்ள ஒரு வீட்டில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜ் போட்டிருக்கும் போது திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
வைரலாகும் வீடியோ
அச்சமயத்தில் அந்த வீட்டிலிருந்த சிசிடீவி கேமராவில் பதிவான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்து ஏற்படும் போது, அருகில் யாரும் இருந்திருந்தால் கண்டிப்பாக காயங்கள் அல்லது உயிரிழப்பு கூட ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
WATCH: We've released frightening footage of an e-scooter battery explosion with a #ChargeSafe plea. Fortunately no one was seriously hurt but residents of the shared house in #Harlesden had to be rehomed due to the devastation. https://t.co/96LoDuBxRh pic.twitter.com/iHQ8MCnEgj
— London Fire Brigade (@LondonFire) May 18, 2023
தற்போது இந்த வீடியோவை லண்டன் தீயணைப்பு படையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
அதில் ‘இ- ஸ்கூட்டர் பேட்டரி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தை காட்டும் வீடியோவை சார்ஜ் சேஃப் கோரிக்கையுடன் வெளியிட்டுள்ளோம். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. ’ என பதிவிட்டுள்ளனர்.