மூட்டு வலியை நிரந்தரமாக குணமாக்க இந்த ஒரு எண்ணெய் போதும்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக வயதான பிறகு தான் மூட்டில் தேய்மானம் உண்டாகும் ஆனால் தற்போது இளம் வயதினரும் மூட்டு வலி பிரச்சினையால் பாதிப்படைகிறார்கள்.
எலும்பின் நடுவில் இருக்கும் மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாக்க கூடும்.
இந்த மூட்டு வலி நிரந்தரமாக குணமாக விராலி இலை போட்டு காய்ச்சிய எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வீட்டிலேயே இந்த மூலிகை எண்ணெய்யை தயாரிக்க முடியும்.எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- விராலி இலை- ஒரு கைப்பிடி
- நல்லெண்ணெய்- 250 கிராம்
செய்முறை
ஒரு இரும்பு கடாயில் சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து அதை நன்றாக காய்ச்சவும்.
இதில் ஒரு கைப்பிடி விராலி இலைகளை கழுவி விட்டு உலர்ந்த பிறகு அந்த எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும்.
நன்றாக இலை காய்ந்து பழுப்பு நிறத்தில் வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி அப்படியே ஒரு நாள் முழுவதும் வைத்துவிட்டு மறுநாள் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளலாம்.
மூட்டுவலி இருக்கும் போது லேசாக சூடுபடுத்தி மூட்டுகளில் தேய்த்து வந்தால் வலிகுறையும். தொடர்ந்து 10 நாட்கள் தேய்த்துவந்தாலே அதன் பலனை நன்றாக உணர முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |