திடீரென டிரசிங் அறைக்குள் சென்ற கோலி, டோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள்! மகிழ்ச்சியில் திளைத்த எதிரணி வீரர்கள்.. வீடியோ
கோலி, ரோகித், டோனி, அஸ்வின் உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஸ்காட்லாந்து வீரர்கள் 'டிரசிங் ரூம்' சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
எமிரேட்சில் 'டி-20' உலக கோப்பை தொடரின் 7வது சீசன் நடக்கிறது. இதன் 'குரூப் 2' லீக் போட்டியில் இந்திய அணி, ஸ்காட்லாந்தை வென்றது.
இப்போட்டி முடிந்த பின் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஸ்காட்லாந்து வீரர்களை அவர்கள் டிரசிங் அறைக்கு சென்று சந்தித்தனர்.
Outstanding experience for the group to pick the brains of some of the best to grace the field ?
— Cricket Scotland (@CricketScotland) November 6, 2021
Who would you want to ask one question to?
? @BCCI
pic.twitter.com/RDE4oh1vIx
அப்போது ஆலோசகர் டோனி தனது 'அட்வைசை' வழங்கினார். கேப்டன் கோலி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் பேட்டிங் குறித்த 'டிப்ஸ்' கொடுத்தனர். 'சீனியர்' சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், பவுலிங் குறித்து தகவல்களை ஸ்காட்லாந்து வீரர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இதற்கு ஸ்காட்லாந்து கிரிக்கெட் போர்டு நன்றி தெரிவித்தது. இதுகுறித்து வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில் கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களின் அனுபவ பாடங்களை தெரிந்து கொண்டது சிறப்பான அனுபவமாக இருந்தது.
எங்களுக்காக நேரம் செலவிட்ட கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் மீது மிகப்பெரிய மதிப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
Huge respect to @imVkohli and co. for taking the time ?? pic.twitter.com/kdFygnQcqj
— Cricket Scotland (@CricketScotland) November 5, 2021