100வது அரைசதமடித்த கோஹ்லி! சொந்த மண்ணில் மரணஅடி வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்..RCB மிரட்டல் வெற்றி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அடித்து நொறுக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணியில் சாம்சன் 15 ஓட்டங்களில் வெளியேற, ரியான் பராக் 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடித்து நொறுக்கினார். அரைசதம் விளாசிய அவர் 47 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
𝘊𝘩𝘦𝘦𝘬𝘺, 𝘤𝘭𝘢𝘴𝘴𝘺, 𝘑𝘢𝘪𝘴𝘸𝘢𝘭! 💫
— IndianPremierLeague (@IPL) April 13, 2025
🎥 A glimpse of Yashasvi Jaiswal before he was dismissed for a well-made 75 (47) 💪
Updates ▶ https://t.co/rqkY49M8lt#TATAIPL | #RRvRCB | @rajasthanroyals | @ybj_19 pic.twitter.com/v7ug36kgrm
கடைசி கட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய துருவ் ஜுரேல் 23 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்கள் எடுத்தது. புவனேஷ்வர்குமார், யஷ் தயாள், ஹேசல்வுட் மற்றும் க்ருனால் பாண்ட்யா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
Finishing touches 🤌 pic.twitter.com/BiKVxVTx8M
— Rajasthan Royals (@rajasthanroyals) April 13, 2025
கோஹ்லி நூறாவது அரைசதம்
பின்னர் ஆடிய பெங்களூரு அணியில் பிலிப் சால்ட், விராட் கோஹ்லி ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
Kohli gets to his 5⃣0⃣ in 𝗥𝗢𝗬𝗔𝗟 style! 👑
— IndianPremierLeague (@IPL) April 13, 2025
🎥 Watch Virat Kohli light up the chase with his classic fireworks! 🔥
Updates ▶ https://t.co/rqkY49M8lt#TATAIPL | #RRvRCB | @RCBTweets | @imVkohli pic.twitter.com/8lNUHmUCKx
இந்தக் கூட்டணி 92 ஓட்டங்கள் விளாச, பிலிப் சால்ட் (Philip Salt) 65 (33) ஓட்டங்களில் வெளியேறினார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து வந்த படிக்கல், கோஹ்லியுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி 100 டி20 அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இருவரின் அதிரடியில் பெங்களூரு அணி 17.3 ஓவரிலியே 175 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட் கோஹ்லி (Virat Kohli) ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்களும், படிக்கல் 28 பந்துகளில் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |