மனைவி முன்னிலையில் 100வது போட்டியில் ஆடிய கோலி! போட்டிக்கு பின் செய்த நெகிழ்ச்சி காரியம்... வைரல் வீடியோ
100வது டெஸ்ட் போட்டியை மனைவி, குழந்தை முன்னர் விளையாடிய விராட் கோலி செய்துள்ள ஒரு காரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை - இந்தியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்த இப்போட்டி விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாகும்.
இப்போட்டியில் ரசிகர்களின் பலத்த ஆரவாரம் மற்றும் கரகோஷத்திற்கிடையே தனது தாய், மனைவி மற்றும் குழந்தைக்கு முன்னிலையில் பேட்டிங் செய்த அவர் சதம் அடிக்கவில்லை என்றாலும் 45 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்த போட்டி முடிந்த பின்னர் அவர் செய்த செயல் ஒன்று ரசிகர்களின் மனதை தொட்டுள்ளது. ஆம் இந்த போட்டி நடைபெற்று முடிந்த பின்னர் மொகாலி மைதானத்தை விட்டு பேருந்து வாயிலாக கிளம்பிக் கொண்டிருந்த விராட் கோலியை பார்ப்பதற்கு “தரம்வீர்” எனும் அவரின் தீவிர மாற்றுத்திறனாளி ரசிகர் நீண்ட நேரமாக காத்திருந்தார்.
Wow it's great day my life @imVkohli he's 100th test match he's gifts me t shirts wow ? #viratkholi #ViratKohli100thTest #KingKohli pic.twitter.com/mxALApy89H
— dharamofficialcricket (@dharmveerpal) March 6, 2022
தனது 100ஆவது போட்டியை முழுமையாக மைதானத்திலிருந்து பார்த்து தமக்கு ஆதரவு அளித்த அந்த ரசிகர் தம்மை பார்ப்பதற்காக மீண்டும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்ததை அறிந்த விராட் கோலி தனது கையொப்பமிட்ட டி-ஷர்ட் ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கினார்.
இந்த வீடியோவை தரம்வீர் சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதில்வாவ் ! விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆனால் எனக்கு அவர் தனது கையொப்பமிட்ட டி-சர்ட்டை பரிசளித்துள்ளார். இது எனது வாழ்நாளில் மிகச் சிறந்த நாள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது.