சொகுசு வாழ்க்கை வாழும் விராட் கோலி; சொத்து மதிப்பு மற்றும் வீட்டின் புகைப்படங்கள்
இந்திய கிரிக்கெட்டின் அடையாளமான "கிங் கோலி" என்று அழைக்கப்படும் விராட் கோலி நவம்பர் 5ம் திகதியான இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
U19 உலகக் கோப்பையில் இந்திய அணியை வெற்றிக்கு வழி நடத்திய விராட் கோலி இன்று வரை தனது அசாதாரண பேட்டிங் திறமையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
“Run Machine” என்று போற்றப்படும் விராட் கோலி இந்திய அணிக்காக குவித்த ஓட்டங்களும், படைத்த சாதனைகளும் இங்கு பல.
இவ்வாறு சாதனை நாயகனாக விளங்கும் விராட் கோலியின் பிறந்தநாளான இன்று அவரது பிரமிக்க வைக்கும் வாழ்க்கை முறை, சொத்து மதிப்பு, வணிகம் ஆகியவற்றை குறித்து பார்ப்போம்.
கோலியின் நிகர சொத்து மதிப்பு
விராட் கோலி சுமார் ரூ. 1,050 கோடி (தோராயமாக USD 127 மில்லியன்) மதிப்பிடப்பட்டுள்ள நிகர சொத்து மதிப்புடன், உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவராக உள்ளார்.
2022ம் ஆண்டு Sportico அவரை உலகின் 61வது அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரராக அறிவித்தது, அந்த ஆண்டில் கோலியின் ஆண்டு வருமானம் $33.3 மில்லியனைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
கோலியின் வருமான ஆதாரங்கள்
விராட் கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உடனான வருடாந்திர ஒப்பந்தம் மூலம் தோராயமாக ரூ. 7 கோடி வருமானம் ஈட்டுகிறார்.
இந்திய பிரீமியர் லீக் (IPL) இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 2024 சீசனில் ரூ.21 கோடிக்கு மறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுக்கு தோராயமாக ரூ. 11.45 கோடியை விராட் கோலி வசூலிக்கிறார்.
உலகில் அதிகம் பின் தொடரும் 20 நபர்களில் விராட் கோலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி பூமா, ஹீரோ மோட்டோகார்ப், மைந்திரா மற்றும் பல முன்னணி பிராண்டுகளின் பரிந்துரைகளுக்கு கணிசமான தொகையை கட்டணமாக வசூலிக்கிறார்.///
கோலியின் வணிகம்
விராட் கோலி பல்வேறு வணிக முயற்சிகளில் தன்னுடைய முதலீட்டை செய்துள்ளார்.
அவற்றில் Blue Tribe, Rage Coffee, FC Goa, Digit Insurance, One8 போன்ற பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
விராட் கோலியின் வீடுகள் மற்றும் கார்கள்
கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா, மும்பையில் தோராயமாக ரூ. 34 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பை வைத்துள்ளனர்.
மும்பை வீட்டின் உட்புறம் நவீன தோற்றம் மற்றும் வசதியின் கலவையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் நவீன சமையலறை மற்றும் தனியார் மொட்டை மாடி போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது.
குருகானில் உள்ள ஆடம்பர பங்களா பசுமையான சூழல் மற்றும் தனியார் நீச்சல் குளம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் அவர்கள் அலிபாக்கில்(Alibaug) 8 ஏக்கர் பண்ணை வீடு மற்றும் குர்கானில்(Gurgaon)ஆடம்பரமான பங்களாவையும் வைத்திருக்கிறார்கள்.
விராட் கோலியின் வீடுகள் அவரது வெற்றியையும் வசதியான மற்றும் ஸ்டைலான வாழ்க்கை முறைக்கான அவரது விருப்பத்தையும் பிரதிபலிக்கின்றன.
கார்களை பொறுத்தவரை, விராட் கோலி Lamborghini Huracan, Audi A8L, மற்றும் Bentley Continental GT ஆகியவற்றை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |