36வது சர்வதேச அரைசதம் அடித்த விராட் கோலி! ஆர்ப்பரித்த மைதானம்
நடப்பு உலகக்கோப்பை தொடரில் கோலி அடித்த 3வது அரைசதம் இதுவாகும்
4000 ஓட்டங்கள் என்ற மைக்கல்லை எட்ட விராட் கோலிக்கு இன்னும் 68 ஓட்டங்கள் தேவை
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி 44 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார்.
அடிலெய்டில் இன்று தொடங்கிய வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
ரோகித் சர்மாவின் விக்கெட் இழப்புக்கு பிறகு விராட் கோலி களமிறங்கினார். நிதானமாக தனது ஆட்டத்தை தொடங்கிய கோலி பவுண்டரிகளை விரட்டினார்.
Twitter (@ICC)
விக்கெட்டை இழக்காமல் ஓட்டங்களை குவிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்த கோலி, சரியான ஷாட்களை தெரிவு செய்து அடித்தார்.
36வது பந்தில் கோலி அரைசதம் அடித்தார். இது அவருக்கு 36வது சர்வதேச அரைசதம் ஆகும். தொடர்ந்து அதிரடி காட்டிய கோலி, 44 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் குவித்தார்.
[