என்ன கோலி மைதானத்துலேயே இப்படி பண்றீங்க - அதிர்ச்சியான ரசிகர்கள்
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி செய்த செயல் தற்போது வைரலாகியுள்ளது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்த போட்டியின் நடுவே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா போல் விராட் கோலி நகைச்சுவையாக பவுலிங் செய்து நடித்து காண்பித்தார். இதனைப் பார்த்து அருகில் இருந்த சக இந்திய வீரர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அப்போது பும்ராவும் சிரித்துக்கொண்டே அருகிலேயே இருந்தார்.
தன்னுடன் விளையாடும் சக வீரர்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள விராட் கோலி இதுபோல் அடிக்கடி குறும்புகளை செய்வது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.