களத்தில் பாடம் எடுத்த கோலி.. கடுப்பான ராகுல்..இந்திய அணியில் புது பிரச்சனை?
இந்திய, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் களத்திலேயே எப்படி கேப்டன்ஷிப் செய்வது என்று ராகுலுக்கு விராட் கோலி பாடம் எடுத்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியடைந்து 2-0 என தொடரை இழந்த இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்து தொடரை முழுவதுமாக இழந்தது.
இதனிடையே மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்தியா அளித்த நெருக்கடியை டி காக், வெண்டர்டுசன் ஜோடி உடைத்து அதிரடியாக விளையாட கையில் இருந்து போட்டி நழுவியது. இதனை உணர்ந்த விராட் கோலி கே.எல்.ராகுலிடம் கோபமாக பேசி ஃபீல்டிங் நிறுத்துவது குறித்து எதோ பேசினார்.
இதற்கு கே.எல்.ராகுல் எதோ விளக்கம் அளிக்க முயன்றார். ஆனால் கோலி அதனை ஏற்காமல் கோபமாக அறிவுரை வழங்கி விட்டு சென்றார். கே.எல்.ராகுல் அனுபவம் இல்லாமல் தினறும் போது கோலி உதவி செய்த இந்த காட்சி வைரலானது. ஆனால் அதன் பிறகு நிகழ்ந்த காட்சிகள் தான் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.