2 ரன்னில் தோனி அவுட்டானதை வெறித்தனமான ஆக்ரோஷத்துடன் கொண்டாடிய கோலி மீது விமர்சனம்! வைரல் வீடியோ
ஐபிஎல் போட்டியில் தோனி அவுட்டானதை கோலி வெறித்தனமான முகபாவனைகளுடன் கொண்டாடியது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் தோனி வெறும் 2 ரன்களுக்கு ஹஸில்வுட் பந்துவீச்சில் ராஜட்டிடம் கேட்ச் ஆகி அவுட்டானார். அப்போது பீல்டிங்கில் இருந்து ஆர்.சி.பி அணி வீரர் விராட் கோலி வெறித்தனமாக கத்தியபடி தோனி அவுட்டானத்தை கொண்டாடினார்.
ஆனால் அவர் தோனியை அவதூறு செய்து கொண்டாடியதாக ஒரு சாரார் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
This Cricket clown? abusing Dhoni still some Mahirat Clowns are supporting this disgusting character ? pic.twitter.com/DX1Cm9k7O3
— Bruce Wayne (@Bruce_Wayne_MSD) May 4, 2022
இதை ஏற்று கொள்ளவே முடியாது, கோலி தோனியை அவதூறு செய்கிறார் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் வேறு சிலரோ கோலி தனது இயல்பான கொண்டாட்டத்தை தான் வெளிப்படுத்துகிறார், இதற்கிடையில், கால்பந்து, டென்னிஸ் கபடி வீரர்கள் காட்டும் ஆக்ரோஷத்தில் கோஹ்லி 10% ஆக்ரோஷத்தை கூட காட்டவில்லை என அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
People getting triggered for kohli celebration
— Bavuma(Hardik warrior ) (@goatbavuma) May 5, 2022
Meanwhile Kohli isn't even showing 10% of agression what football, tennis kabbadi players show