டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த விராட் கோலி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
விராட் கோலி ஓய்வு
சூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து, அணியின் மற்றொரு முக்கிய ஜாம்பவானான விராட் கோலியும் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பிசிசிஐ அவரது முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில், விராட் கோலி இன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விராட் கோலி, இந்திய அணிக்காக, இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள, 30 சதம், 31அரை சதம் உட்பட 9,230 ரன்கள் எடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |