டோனியுடனான நட்புறவு எப்படி? ரசிகர் கேள்விக்கு 2 வார்த்தைகளில் நச் பதில் அளித்த விராட் கோஹ்லி
இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குகு விராட் கோஹ்லி சுவாரசியமான பதில்களை அளித்துள்ளார்.
இங்கிலாந்து தொடருக்காக தற்போது தனிமைப்படுத்துதலில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது டோனியுடனான உங்களது நட்புறவை 2 வார்த்தைகளில் விவரிக்கும்படி ஒரு ரசிகர் கேட்ட போது, நம்பிக்கை மற்றும் மரியாதை என்றார்.
கூகுளில் கடைசியாக யாரை தேடினீர்கள் என்ற கேள்விக்கு, போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ என்று பதிலளித்தார்.
கடந்தகால பந்து வீச்சாளர்களில் உங்களுக்கு கடும் குடைச்சல் கொடுக்கும் பவுலராக யார் இருந்திருப்பார்? என்ற கேள்விக்கு பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் பெயரை குறிப்பிட்டார்.