மனைவிக்கு காதலை அள்ளி வீசிய கோலி! உலக கோப்பையில் தோத்துட்டு இது தேவையா என ரசிகர்கள் கிண்டல்
சமூகவலைதளத்தில் தனது மனைவி வெளியிட்ட புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த விராட் கோலியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
டி20 உலக கோப்பை போட்டியின் அரையுறுதி ஆட்டம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்தது. இங்கிலாந்திடம் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களும் தற்போது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா சமீபத்தில் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் அவர் குறைந்த ஒப்பனையுடன் இயற்கையான சூரிய ஒளியில் அழகாகத் தெரிந்தார், இது அவரது கணவர் விராட்டையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
இதையடுத்து மூன்று சிவப்பு இதய இமோஜிகளை கோலி கமெண்டில் பதிவிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் விராட் கோலியை விமர்சித்தனர். ஏனெனில் அரையிறுதியில் தோல்வியடைந்ததற்கு வருத்தப்படாமல் இப்படி ஜாலியாக கமெண்ட் செய்கிறீர்களே என விமர்சித்தனர்.
அதே நேரம் பலரும் கோலி தனது பங்களிப்பை உலக கோப்பையில் சிறப்பாக தான் கொடுத்தார் என ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.