குடும்ப தலைவராக பொதுவெளியில் காட்சி கொடுத்த விராட் கோஹ்லி! மனைவி, குழந்தையுடன் சென்ற அழகிய புகைப்படம்
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் போட்டிகளில் கலந்துக் கொள்ள விராட் கோஹ்லி தனது மனைவி, குழந்தையுடன் விமான நிலையத்தில் சென்ற புகைப்படம் வைரலாகியுள்ளது.
புனேவில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஒருநாள் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கிளம்பி சென்றார்.
தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகா ஆகியோருடன் அகமதாபாத் விமான நிலையத்தில் சென்ற விராட் கோஹ்லியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.
என்ன தான் புகழ்பெற்ற உலகின் நம்பர் 1 கிரிக்கெட் வீரராக இருந்தாலும் தான் ஒரு குடும்ப தலைவர் என்பதை உணர்ந்திருந்த கோஹ்லி தனது மனைவி மற்றும் மகளின் அனைத்து பொருட்களையும் கையில் வைத்திருந்தார்.
அதில் சாமான்கள், கைப்பைகள், அவரது கிரிக்கெட் கிட் இருந்தது.
விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா குழந்தையை சுமந்துகொண்டிருந்தார்.
