இனி அவ்வளவு தானா கோலி? கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் கேள்விக்கு கிடைத்த பதில்
இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி இடத்திற்கு பிரச்சனையா என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
விராட் கோலி 16 ரன்கள் சேர்த்தனர். அவர் தொடர்ந்து படுமோசமாக விளையாடி வருவது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகவே விராட் கோலி ரன்கள் குவிக்க மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்.
அடுத்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும் கோலி சேர்க்கப்படவில்லை. இதனால் அணியில் அவரின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய ரோகித் சர்மா, விராட் கோலி ஏராளமான போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர், சிறந்த பேட்ஸ்மேன். அணியில் அவரது இடம் குறித்து மறு உறுதியளிக்க தேவையில்லை. நான் முன்பு கூறியது போல், பார்ம் என்பது ஏற்ற, இறக்கங்கள் கொண்டது.
ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையிலும் இது ஒரு பகுதியாகும். சிறந்த கிரிக்கெட் வீரர் கூட ஏற்ற, தாழ்வுகளில் பங்களிப்பார். இந்திய அணிக்காக பல்வேறுபோட்டிகளில் வெற்றி தேடிக்கொடுத்த ஒருவருக்கு, மீண்டும் எழுந்து வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ்கள் தேவை. அதைத் தான் நான் உணர்கிறேன். கிரிக்கெட்டை பின்தொடர்பவர்களும் அதேபோன்றே நினைப்பார்கள் என கருதுகிறேன்.
விராட் கோலியின் பார்ம் குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்று எனக்குத் தெரியும், ஆனால் நாங்கள்பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம், வீரர்கள் ஏற்ற தாழ்வுகளைக் கடந்து செல்கிறோம், ஆனால் தரம் ஒருபோதும் மறைந்துவிடாது என கூறியுள்ளார்.
AFP