மீண்டும் மட்டமாக அவுட் ஆன கோலி! தன்னம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறும் பிரபல வீரர்
தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் விராட் கோலியை விளாசியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.
விராட் கோலி சமீப காலமாக சரியாக ரன்களை குவிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் விராட் கோலியை விளாசியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.
விராட் கோலி சமீப காலமாக சரியாக ரன்களை குவிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 18 பந்தில் 2 பவுண்டரிகள் அடித்திருந்த நிலையில் பாட் வீசிய பந்தில் விளையாடாமல் இருக்க பேட்டை மேலே தூக்கும்போது துரதிஷ்டவசமாக எட்ஜ் வாங்கி போல்ட் ஆனார்.
EDGBASTON GOES POTTY! ?
— England Cricket (@englandcricket) July 1, 2022
Scorecard/Videos: https://t.co/jKoipF4U01
??????? #ENGvIND ?? pic.twitter.com/X5G3B2HsRU
ஒவ்வொரு முறையும் விராட் கோலி அவுட் ஆகும் போது ஏதாவது அதிர்ஷ்டமில்லாமலே அவுட் ஆகும் போக்கு தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
விராட் கோலி பற்றி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில், கிரிக்கெட் விமர்சகராக நான் விராட் கோலி தனது தன்னம்பிக்கையை சிறிது இழந்துவிட்டாரென சொல்லுவேன்.
அதிர்ஷ்டமின்மையும் இருக்கிறது. டெக்கினிக்கல் பிரச்சனை இருக்கிறது. அவர் அதிகமாக முன்னோக்கி வந்து பிரண்ட் புட்டில் விளையாடுகிறார்.
எல்லோரும் டெக்கினிக்கலாக சரியாக விளையாடாவிட்டாலும் ரன்களை எடுக்கின்றனர். விராட் கோலியின் இந்த நிலைமை என்னை மிகவும் கவலைக்குள்ளாக்குகிறது என கூறியுள்ளார்.