மஹேலா ஜெயவர்தனேவின் உலக சாதனையை முறியடித்த கோலி! பாராட்டிய இலங்கை ஜாம்பவான் வீடியோ
ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்த விராட் கோலி.
மனதார பாராட்டி வாழ்த்திய இலங்கை அணி ஜாம்பவான்.
இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனேவின் உலக சாதனையை முறியடித்து கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
அதன்படி டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்து இந்திய வீரர் விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள கோலி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அடிலெய்டில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் எடுத்தபோது, டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார்.
இதுவரை இந்த சாதனையை இலங்கையின் ஜெயவர்தனே வைத்திருந்தார். 31 இன்னிங்சில் விளையாடி ஆயிரத்து 17 ரன்கள் குவித்திருந்த ஜெயவர்தனேவின் சாதனையை வெறும் 23 இன்னிங்சில் கடந்துள்ளார் கோலி.
இது குறித்து பேசிய ஜெயவர்தனே, சாதனைகள் என்பது உடைக்கப்பட வேண்டும், என் சாதனையை யாரோ எப்பொழுதும் முறியடிக்கப் போகிறார்கள், அது நீங்கள் தான் விராட். வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் ஒரு போர்வீரன், வெல்டன் என பாராட்டியுள்ளார்.
AFP