சொந்த சாதனைக்காக விராட் கோலி சதம் அடித்தாரா? தெளிவுபடுத்திய கே.எல்.ராகுல்
நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்துக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்தது குறித்து கே.எல்.ராகுல் பதில் அளித்துள்ளார்.
சதம் அடித்த கோலி
நேற்றைய போட்டியில் வெற்றிக்கு அழைத்துச் சென்றது விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி தான். விராட் கோலி 85 ரன்கள் இருந்த நிலையில் வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது, ஒரு சிங்கிள் ரன் கூட எடுக்காமல் விராட் கோலி சதம் அடிப்பதற்கான வாய்ப்பை கே.எல்.ராகுல் ஏற்படுத்தினார்.
இதனால், தன்னுடைய சொந்த சாதனைக்காக விராட் கோலி சதம் எடுத்தார் என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
கே.எல்.ராகுல் கூறியது
இது தொடர்பாக கே.எல்.ராகுல் கூறும்போது, "கோலி சதம் எடுப்பதற்காக நான் சிங்கிள் எடுப்பதை தவிர்த்தேன். நீங்கள் சிங்கிள் எடுக்காமல் போனால் அது நன்றாக இருக்காது. நான் சொந்த சாதனைக்காக விளையாடுகிறேன் என நினைப்பார்கள் என கோலி என்னிடம் கூறினார்.
அவர் என்னை சிங்கிள் எடுக்கும் படி கூறினார். ஆனால், வெற்றி உறுதியானதால் நான் தான் கோலியை சதம் எடுக்கும்படி கூறினேன். 30 ரன்கள் தேவைப்பட்டபோது அனைத்து பந்துகளையும் நான் தடுத்து ஆடுகிறேன். பெரிய ஷாட்டை நீங்கள் விளையாடுங்கள் எனக் கூறினேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |