ஐபிஎல் திருவிழா: ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடிக்கப் போகும் கோஹ்லி
ஐபிஎல் தொடரில் அதிகமுறை தொப்பியை வென்றவர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைக்க உள்ளார்.
ஐபிஎல் 2025
2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் நாளை ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் பெங்களூரு அணி வீரர் விராட் கோஹ்லிக்கு மிகப்பெரிய சாதனை ஒன்றை தகர்க்கும் வாய்ப்பு உள்ளது.
அதாவது, அதிக ஓட்டங்கள் குவித்த வீரருக்கு ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுகிறது.
கோஹ்லிக்கு வாய்ப்பு
இந்த தொப்பியை மூன்று முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற மாபெரும் சாதனையை டேவிட் வார்னர் (David Warner) வைத்துள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோஹ்லி இருவரும் உள்ளனர். இவர்களில் கெய்ல் ஓய்வு பெற்றுவிட்டதால் வார்னரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு விராட் கோஹ்லிக்கு உள்ளது.
இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. கோஹ்லி 252 போட்டிகளில் 8,004 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |