வெளிநாடு சென்று திரும்பிய விராட் கோலிக்கு கொரோனா! வெளியான தகவல்
மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட சென்று திரும்பிய விராட் கோலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு தென் ஆப்பிரிக்க தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா, கோலி தங்களது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். அதன் பிறகு விராத் கோலி இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அவர் தப்போது குணமடைந்துவிட்டதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய அணி கிரிக்கெட் அணி கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. ரோகித் சர்மா அணித்தலைவராக செயல்பட உள்ள நிலையில், விராட் கோலி அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.