ஐபிஎல் 2025 முதல் போட்டியிலேயே புதிய வரலாறு படைத்த கோஹ்லி! முதல் வீரர் இவர்தான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில், அரைசதம் விளாசியதன் மூலம் விராட் கோஹ்லி வரலாற்று சாதனை படைத்தார்.
புதிய வரலாறு
ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2025யின் முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி 174 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் கோஹ்லி 59 ஓட்டங்களும், பிலிப் சால்ட் 56 ஓட்டங்களும் விளாச, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
I have always said Virat Kohli shouldn't have retired from T20Is so soon, he is all time greatest player of T2OI & should have taken retirement at 2026 T2OI WC in front of home crowd.
— Rajiv (@Rajiv1841) March 23, 2025
India will miss big match temperament of Virat in 2026 WC for sure.pic.twitter.com/UJI6VFb0qR
இப்போட்டியில் கோஹ்லி புதிய வரலாறு படைத்தார். அதாவது, நான்கு அணிகளுக்கு எதிராக 1000 ஓட்டங்கள் விளாசிய முதல் வீரர் விராட் கோஹ்லிதான்.
கோஹ்லி மிரட்டல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,053 ஓட்டங்களும், டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிராக 1,057 ஓட்டங்களும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,030 ஓட்டங்களும், கொல்கத்தா அணிக்கு எதிராக 1,021 ஓட்டங்களும் கோஹ்லி எடுத்துள்ளார்.
அதேபோல் மூன்று முறை கிண்ணத்தைக் கைப்பற்றிய அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 1000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது வீரர் கோஹ்லி ஆவார்.
இதற்கு முன் ரோஹித் ஷர்மா (1070), டேவிட் வார்னர் (1093) மட்டுமே இந்த பெருமையை பெற்றிருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |