எண் 18 என் வாழ்க்கையின் அங்கம்: டி-ஷர்ட்டின் ரகசியம் உடைத்த கோலி
என் வாழ்க்கையில் அந்த எண் முக்கிய திகதியாக மாறிவிட்டது என்று கிரிக்கெட் சட்டையின் கதையை விராட் கோலி பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரும், விராட் கோலியின் சர்ச்சையும்
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத்தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி கலந்துகொண்டு விளையாடி வருகிறது. ஆனால், ஐபிஎல் தொடரில் சர்ச்சையில் மாட்டி விராட் கோலி மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த பெங்களூருக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்திற்கு முன்பு DC இயக்குனர் கங்குலி, நடந்து செல்லும்போது விராட் கோலியை அப்பட்டமாகப் புறக்கணித்தார். மேலும், சமீபத்தில் நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே போட்டி நடந்தது.
இப்போட்டி முடிந்து இரு அணி வீரர்கள் மைதானத்தை விட்டு நடந்துச் செல்லும்போது ஒருவரையொருவர் கை குலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது விராட் கோலிக்கும், கவுதம் கம்பீருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் சர்ச்சையாக வெடித்தது.
முட்டிக்கொள்ளும் அளவிற்கு இவர்களுடைய வாக்குவாதம் மைதானத்தில் சூடு பிடித்தது. இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக விராட் கோலிக்கும், கவுதம் கம்பீருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
மனம் திறந்து பேசிய கோலி
இந்நிலையில், வீரர் விராட் கோலி செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், ‘18’ என்று நம்பர் கொண்ட சட்டையை நானாக கேட்டு வாங்கிக்கொள்ளவில்லை. அது தானாகவே எனக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த நம்பர் என் வாழ்க்கையில் முக்கிய எண்ணாகவே மாறிவிட்டது. ஆகஸ்ட் 18ம் திகதி தான் நான் முதன் முதலாக இந்தியாவிற்காக விளையாடினேன்.
மேலும், என் அப்பா உயிரிழந்தது டிசம்பர் 18ம் திகதி. இதனால் என் வாழ்க்கையில் மிக முக்கிய திகதியாக இந்த 18ம் எண் மாறிவிட்டது என்றார்.