என் உயிரே... என் மகளே... - விராட் கோலி வெளியிட்ட புகைப்படம் - தெறிக்க விடும் ரசிகர்கள்!
விராட் கோலி, தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில், இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலியுடம் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்
16வது ஐபிஎல் தொடருக்கான 9வது லீக் போட்டி நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும், கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இப்போட்டியை நேரில் காண கேகேஆர் அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான் ஈடன் கார்டன் மைதானத்திற்கு வந்திருந்தார். ஷாருக்கானைப் பார்த்ததும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானமே கோலாகல கொண்டாட்டத்துடன் காணப்பட்டது.
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை பார்த்ததும் ஓடி வந்து கட்டியணைத்து முத்தமிட்டார். பின்னர் இருவரும், "ஜோமி ஜொ பதான்" என்ற ஹிந்தி பாடலுக்கு மைதானத்தில் நடனமாடினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
தன் மகளுடன் விராட் கோலி
இந்நிலையில், பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், ஒரு நீச்சல் குளத்தில், விராட் கோலியும், அவருடைய மகளும் அமர்ந்துள்ளனர். தற்போது வைரலாகும் இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
— Virat Kohli (@imVkohli) April 11, 2023