விராட் கோலியை பார்த்து திகைத்து நின்ற ரிக்கிபாண்டிங் மகன் - வைரலாகும் வீடியோ!
விராட் கோலியை பார்த்து திகைத்து நின்ற ரிக்கிபாண்டிங் மகனின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ரிக்கி பாண்டிங் கணிப்பு
சமீபத்தில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார். அப்போது அவர் பேசுகையில்,
ஐபிஎல் தொடரில் குஜராத் அணி வலுவான அணி தான் இருக்கிறது. கடந்த தொடரில் குஜராத் அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் கடந்த தொடரில் இறுதிப் போட்டி வரை தகுதி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முறை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து வகையிலும் வலுவான அணியாக இருக்கிறது. ஆதலால், இந்த தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அசுரபலத்துடன் இருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது என்றார்.
திகைத்து பார்த்த ரிக்கிபாண்டிங் மகன்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
DC vs RCB போட்டிக்கு முன்பு விராட் கோலி, ரிக்கி பாண்டிங் மற்றும் அவரது மகனை சந்தித்தார். அப்போது ரிக்கி பாண்டிங்கும், விராட் கோலிக்கும் நட்புடன் பேசிக்கொண்டனர். அப்பாது,ரிக்கி பாண்டிங் மகன் விராட் கோலியைப் பார்த்து அப்படியே திகைத்து நின்றுவாறு பார்த்துக் கொண்டிருந்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#WATCH: @imVkohli meets @RickyPonting's son ahead of DC vs RCB match#ViratKohli #RickyPonting #RCBvsDC #RCB #DC #IPL #Trending #TrendingNow pic.twitter.com/wJNieAnBt4
— HT City (@htcity) April 14, 2023