டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது மைதானத்தில் நடனமாடிய கோஹ்லி! அசந்து போன ரசிகர்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, மைதானத்தில் விராட் கோஹ்லி நடனமாடியது பலரின் கவனத்தை ஈர்த்தது.
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில், இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது.
மூன்று நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நேற்றைய போட்டியின்போது மைதானத்தில் பஞ்சாபி பாடல் ஒன்றிற்கு விராட் கோஹ்லி நடனம் ஆடினார்.
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடந்துகொண்ட கோலியின் இந்த செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
மேலும், ஒவ்வொரு வீரரும் அவரிடமிருந்து இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Virat Kohli Showcases Dance Moves To Bhangra Beats During WTC Final goes viral. pic.twitter.com/3985zadXfK
— ?????? ??????? ???? (@MrsShubmanGill) June 21, 2021