விராட் கோலியின் தீவிர ரசிகர்... அவருக்கு சொந்தமான அணியின் மதிப்பு RCB-ஐ விட 10 மடங்கு
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோஹ்லியின் தீவிர ரசிகரான இந்திய - அமெரிக்க தொழிலதிபர் Vivek Ranadive என்பவர் சொந்தமாக ஒரு விளையாட்டு அணியை நிர்வகித்து வருகிறார்.
Sacramento Kings
தற்போது 66 வயதாகும் Vivek Ranadive சமீபத்தில் நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக் கிண்ணம் போட்டிகள் தொடர்பில் விராட் கோஹ்லியை தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவில் Sacramento Kings என்ற கூடைப்பந்து அணியின் உரிமையாளர் Vivek Ranadive. மும்பை மாநகரில் பிறந்து வளர்ந்த Vivek Ranadive, மூன்று பிள்ளைகளில் இளையவர்.
சந்தை மதிப்பு ரூ 27,720 கோடி
மும்பையில் உள்ள பாம்பே இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி முடித்துள்ளார். இவருக்கு சொந்தமாக TIBCO என்ற மென்பொருள் நிறுவனமும் உள்ளது. இவரது Sacramento Kings என்ற கூடைப்பந்து அணியின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 27,720 கோடி என்றே கூறப்படுகிறது.
ஆனால் RCB அணியின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ 1,620 கோடி என்றே கூறப்படுகிறது. ரணதிவ் எம்ஐடியில் மின் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர். இதன் பின்னர் ஹார்வர்டில் எம்பிஏ பட்டம் பெற்றார். 2022ல் பேஸ்பால் அணி ஒன்றையும் ரணதீவ் வாங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |