விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்த 4 ரசிகர்கள் கைது - பெங்களூரு டெஸ்டில் சோகம்
பெங்களூருவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்த 4 ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
King Kohli Fans Mass ???
— Virat Kohli Trends™ (@TrendVirat) March 13, 2022
3 Fans Jumped the Security Fence to meet their Idol @imVkohli ? pic.twitter.com/T3vc4dnpqF
இதனிடையே போட்டியின் 2வது நாளின் போது முன்னாள் கேப்டன் விராட் கோலி உள்பட இந்திய அணியினர் பீல்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது கம்பி வேலியை தாண்டி மைதானத்திற்குள் திடீரென நுழைந்த 4 ரசிகர்கள் நேராக விராட் கோலியை நோக்கி ஓடினர்.
அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விரட்டிப் பிடிக்க நினைத்த நிலையில் விராட் கோலியிடம் செல்பி எடுக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதற்கு அவரும் சம்மதித்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன்பின் 4 பேரையும் போலீசார் பிடித்து இருக்கை பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்கள் 4 பேர் மீதும் பெங்களூரு கப்பன் பூங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இவர்கள் 4 பேரும் நண்பர்கள் இல்லை என்பதும், ஒருவர் மைதானத்துக்குள் புகுவதை பார்த்து அடுத்தடுத்து உள்ளே புகுந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் இதுதொடர்பாக கர்நாடக போலீசாருக்கு பிசிசிஐ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.