ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாறு படைத்த கோஹ்லி! இதுவரை எந்த ஜாம்பவானும் செய்யாத சாதனை
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 1,000 பவுண்டரிகள் அடித்த வீரர் எனும் வரலாற்று சாதனையை விராட் கோஹ்லி படைத்தார்.
கோஹ்லி
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி (Virat Kohli) 18 சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.
டெல்லி அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் விராட் கோஹ்லி 14 பந்துகளில் 2 சிக்ஸர், 1 ஃபோருடன் 22 ஓட்டங்கள் எடுத்தார்.
முதல் வீரர்
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 1000 பவுண்டரிகள் கடந்த முதல் வீரர் எனும் வரலாறு படைத்தார்.
கோஹ்லி 257 போட்டிகளில் 280 சிக்ஸர்கள், 721 ஃபோர்ஸ் என மொத்தம் 1001 பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
ஷிகர் தவான் 920 பவுண்டரிகளும், டேவிட் வார்னர் 899 பவுண்டரிகளும், ரோஹித் ஷர்மா 885 பவுண்டரிகளும் விளாசி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |