புதிய சரித்திர சாதனை படைத்த விராட் கோஹ்லி
ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு முறை 600 ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை கோஹ்லி படைத்தார்.
கோஹ்லி 600 ஓட்டங்கள்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி (Virat Kohli) 25 பந்துகளில் 43 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் நடப்பு தொடரில் அவர் 600 ஓட்டங்களை கடந்தார்.
சாதனை
தொடர்ச்சியாக நான்கு சீஸன்களில் 600 ஓட்டங்களுக்கு மேல் கடந்த வீரர் என்ற சாதனையை கோஹ்லி படைத்தார்.

இதற்கு முன்பு கே.எல்.ராகுல் 3 முறையும், டேவிட் வார்னர் 3 முறையும், கிறிஸ் கெய்ல் 3 முறையும் தொடர்ந்து 4 சீஸன்களில் 600 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தனர்.
விராட் கோஹ்லி நடப்பு தொடரில் 15 இன்னிங்ஸ்களில் ஒரு சதம், 4 அரைசதங்களுடன் 600 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |