இந்திய வீரர்களில் யாரும் செய்யாத இமாலய சாதனையை படைத்த கோலி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி (Virat Kohli) இமாலய சாதனையை படைத்தார்.
17வது ஐபிஎல் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற RCB அணி முதலில் துடுப்பாடியது. சென்னை அணியின் பந்துவீச்சை டூ பிளெஸ்ஸிஸ் அடித்து நொறுக்க, விராட் கோலி தடுமாறினார்.
கோலி 20 பந்துகளில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்து 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக அவர் 6 ஓட்டங்களை எட்டியபோது, டி20 கிரிக்கெட்டில் 12,000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டினார்.
உலகளவில் இந்த சாதனையைப் படைத்த 6வது வீரர் கோலி ஆவார். ஆனால், இந்திய வீரர்களில் இவர் தான் 12,000 ஓட்டங்களை எட்டியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் 11,156 ஓட்டங்களுடன் ரோகித் சர்மா உள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்:
- கிறிஸ் கெய்ல் - 14,562
- சோயப் மாலிக் - 13,360
- கீரன் பொல்லார்டு - 12,900
- அலெக்ஸ் ஹேல்ஸ் - 12,319
- டேவிட் வார்னர் - 12,065
First Indian to reach the 12000 T20 runs milestone ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #CSKvRCB #ViratKohli pic.twitter.com/Dh5rCn6nzl
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 22, 2024