ஹர்திக் பாண்டியாவை வெறுக்கும் ரசிகர்களுக்கு ஆடுகளத்திலேயே பதில் கொடுத்த கோலி
மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக, வான்கடே போட்டியில் விராட் கோலி ரசிகர்களிடம் சைகை காட்டியது பாராட்டுகளை பெற்றது.
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக களமிறங்கியதில் இருந்து, ரோஹித் ஷர்மாவின் ரசிகர்கள் மைதானத்திலேயே அவருக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர்.
இது ஒவ்வொரு போட்டியிலும் தொடர்கிறது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அதேபோல் ரசிகர்கள் கூச்சலிட, ஃபீல்டிங்கில் நின்றிருந்த விராட் கோலி அவர்களிடம்,
''ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர் தான். அவர் பல ஆண்டுகளாக விளையாடுகிறார். இப்படி செய்ய வேண்டாம்'' என சைகையாக கூறினார்.
இதன்மூலம் விராட் கோலி ஒரு சிறந்த sportsmanship கொண்டவர் என பாராட்டுகளை பெற்று வருகிறார். இதுகுறித்து ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில்,
''ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்! அவரது சதங்கள் மற்றும் சாதனைகள் அனைத்தையும் எடுத்துவிடுங்கள், விராட் இன்னும் சிறந்த ஆட்டத்தில் ஒருவராக இருப்பார். போட்டியின் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், அவர் எப்போதும் தனது எதிரணி வீரர்களுக்கு கூட விளையாட்டுத்திறனை அழைக்கிறார்!'' என பதிவிட்டுள்ளார்.
Spirit of Cricket ?
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 12, 2024
Take away all his centuries and records and Virat would still be one of the greatest of the game.
Irrespective of the match situation, he always calls for sportsmanship even for his opponents! ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #MIvRCB pic.twitter.com/8tCV81AY5J
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |