விமர்சனங்களை தவிடுபொடியாக்கி 81வது சதம் விளாசிய கோஹ்லி! அவுஸ்திரேலியாவுக்கு 534 ரன் இலக்கு
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோஹ்லி 30வது சதம் விளாசினார்.
ஜெய்ஸ்வால் 161
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடந்து வருகிறது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வந்த இந்திய அணியில் கே.எல்.ராகுல் 77 ஓட்டங்களும், ஜெய்ஸ்வால் 161 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
அடுத்து வந்த படிக்கல் 25 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பண்ட் (1), ஜூரேல் (1) வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். எனினும் விராட் கோஹ்லி நிலைத்து நின்று ஆடினார்.
கோஹ்லி சாதனை
143 பந்துகளை எதிர்கொண்ட கோஹ்லி, 2 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்தார். இது அவருக்கு 81வது சர்வதேச சதம் ஆகும். அத்துடன் 30வது டெஸ்ட் சதம் ஆகும்.
இதன்மூலம், இந்தியாவுக்காக ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் (9) அடித்த சச்சினின் சாதனையை கோஹ்லி சமன் செய்தார்.
இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 487 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கோஹ்லி 100 ஓட்டங்களுடனும், நிதிஷ் ரெட்டி 38 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
அறிமுக வீரரை களத்திலேயே நேரடியாக எச்சரித்த ஸ்டார்க்! நான் உன்னைவிட வேகமாக பந்துவீசுவேன் என சவால் (வீடியோ)
அவுஸ்திரேலிய அணி 534 ஓட்டங்களும் எனும் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |