மைதானத்திற்குள் வெடித்த சண்டை! விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீருக்கு 100% அபராதம்
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மைதானத்திற்குள் வெடித்த சண்டையால் விராட் கோலிக்கும், கவுதம் கம்பீருக்கும் 100% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோலியை புறக்கணித்த சவுரவ் கங்குலி
சமீபத்தில் நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்திற்கு முன்னதாக, கோலி மற்றும் கங்குலி சம்பந்தப்பட்ட வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆட்டத்தில் DC இயக்குனர் கங்குலி, நடந்து செல்லும்போது விராட் கோலியை அப்பட்டமாகப் புறக்கணித்தார்.
கோலியும் திரும்பி சவுரவ் கங்குலியைப் பார்த்து முறைத்தார். மேலும், சவுரவ் கங்குலியை பின்தொடர்ந்த டிசி யூனிட்டின் மற்ற உறுப்பினர்களும், கோலிக்கு வணக்கம் சொல்வதை நிறுத்தினார்கள். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முட்டிக்கொண்ட விராட் கோலி - கவுதம் கம்பீர்
ஐபிஎல் தொடரின் 43வது லீக் ஆட்டத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியின் முடிவில் லக்னோ அணியை 18 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி அடைந்தது. நேற்று நடைபெற்ற ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடந்தது. லக்னோ வீரர் க்ருனால் பாண்டியா அடித்த பந்தை கேட்ச் பிடித்த விராட் கோலி முத்தங்களை பறக்க விட்டு மைதானத்தை அதிர வைத்தார்.
இந்தப் போட்டி நடைபெற்ற பிறகு, இரு அணி வீரர்கள் மைதானத்தை விட்டு நடந்துச் செல்லும்போது ஒருவரையொருவர் கை குலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
அப்போது, விராட் கோலிக்கும், கவுதம் கம்பீருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. முட்டிக்கொள்ளும் அளவிற்கு இவர்களுடைய வாக்குவாதம் மைதானத்தில் சூடு பறந்தது.
இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சக வீரர்கள் இருவரையும் வாக்குவாதத்தை தடுத்தி நிறுத்தி இருவரையும் விலகி விட்டனர். இதன் பிறகு, இருவரையும் சக வீரர்கள் தனித்தனியே அழைத்து சென்றனர்.
விராட் கோலிக்கும், கம்பீருக்கும் அபராதம்
இந்நிலையில், நேற்றைய ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக தற்போது விராட் கோலிக்கும், கவுதம் கம்பீருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலிக்கு 1.07 கோடி (100%)மாகவும், கவுதம் கம்பீருக்கு 25 லட்சம் (100%) அபராதமும், நவீன் உல் ஹக்கிற்கு 1.79 லட்சம் (50%) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற RCB அணிக்கு இடையேயான ஆட்டத்தில் அவர்கள் ஸ்லெட்ஜிங்குடன் தொடங்கி, வார்த்தை போர்க்களமாகவும், சண்டையில் முடிந்தது.
தற்போது இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து, சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Fines for breaching the IPL Code Of Conduct yesterday (lSG vs RCB):
— pratap (@9ineblues) May 2, 2023
Virat Kohli - 1.07cr (100%).
Gautam Gambhir - 25 Lakhs (100%).
Naveen Ul Haq - 1.79 Lakhs (50%).
Last night match between RCBwhere they started with sledging and ended with verbal abuse and browl#RCBvLSG pic.twitter.com/Uz7n0Sjlvu
Also #ViratKohli ,#gautamgambhir and #naveenulhaq are fines for breathing the IPL Code Of Conduct yesterday:
— Sarthak Tyagi (@Sarthak88632581) May 2, 2023
Virat Kohli - 1.07cr (100%)
Gautam Gambhir - 25 Lakhs(100%)
Naveen Ul Haq - 1.79 Lakhs (50%) pic.twitter.com/La3Mix0m6l