நான் தான் நம்பர்-1, விராட் கோஹ்லி எனக்கு பின்: பாகிஸ்தான் வீரரின் அதிர்ச்சி தரும் வாதம்
கோஹ்லியின் சாதனையை விட தனது சாதனை சிறப்பாக உள்ளது என்று பாகிஸ்தான் வீரர் ஒருவர் கூறியுள்ளார்.
விராட் கோஹ்லி
விராட் கோஹ்லி தனது சகாப்தத்தின் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறலாம். அவரது அதிரடியான ஆட்டத்தில் சற்று மந்தநிலை காணப்பட்டது, ஆனால் கோஹ்லி சமீபத்தில் தனது மேஜிக் ஆட்டத்தை மீண்டும் தொடங்கினார்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காத கோஹ்லி, கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பையில் தனது சத வறட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார், இது டி20 போட்டிகளில் அவரது முதல் சதமாகும்.
ICC
அதன் பிறகு, 35 வயதான அவர் திரும்பிப் பார்க்கவில்லை, தனது கடைசி ஏழு ODI அவுட்களில் மூன்று சதங்களை அடித்தார். இந்திய அணியின் முன்னாள் மேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை சமன் செய்ய அவர் இன்னும் மூன்று ஒருநாள் சதங்களை அடிக்கவேண்டும்.
நான்தான் உலகின் நம்பர்.1
இப்போது, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தனது சாதனை கோஹ்லியின் சாதனையை விட சிறப்பாக உள்ளது என்று பாகிஸ்தான் வீரர் ஒருவர் கூறியுள்ளார்.
சமீபத்திய உரையாடலின் போது , 16 டெஸ்ட், ஏழு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியில் விளையாடிய மூத்த வீரர் குர்ரம் மன்சூர் (Khurram Manzoor) , கோஹ்லியை விட தனது லிஸ்ட் ஏ எண்கள் சிறந்ததாக இருப்பதாக அவர் கூறியது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மன்சூர், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோஹ்லியுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது அல்ல, உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது சாதனைகளை முன்னிலைப்படுத்துவதே தனது நோக்கம் என்று தெளிவுபடுத்தினார்.
"நான் என்னை விராட் கோலியுடன் ஒப்பிடவில்லை. உண்மை என்னவென்றால், 50 ஓவர் கிரிக்கெட்டில், டாப்-10ல் யார் இருந்தாலும், நான்தான் உலகின் நம்பர்.1. ஒவ்வொரு 6 இன்னிங்ஸிலும் சதம் அடிப்பதால், கோஹ்லி எனக்குப் பின்னால் இருக்கிறார். நான் ஒவ்வொரு 5.68 இன்னிங்ஸிலும் சதம் அடிப்பது உலக சாதனையாகும். கடந்த 10 ஆண்டுகளில் எனது சராசரி 53, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் நான் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளேன்" என்று மன்சூர் கூறினார்.