இரவு முழுவதும் மது பார்ட்டியில் கும்மாளம் போட்ட விராட் கோலி - ரகசியத்தை போட்டுடைத்த இசாந்த் ஷர்மா
விராட் கோலி
இந்திய கிரிக்கெட்டில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் விராட் கோலி. சில ஆண்டுகளாக சரிவில் இருந்து வந்த கோலி சமீபத்தில் ஆசிய கிரிக்கெட் தொடரிலும், ஐபிஎல் தொடரில் சிறந்த முறையில் தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தார். சமீபத்தில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் தீராத காய்ச்சல் இருந்த போதிலும் இரட்டை சதத்தை நெருங்கினார்.
ரகசியத்தை கூறிய இசாந்த் ஷர்மா
இந்நிலையில் விராட் கோலி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் ஷர்மா பல ரகசியத் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், விராட் கோலிக்கு எப்போதுமே பார்ட்டி போக வேண்டும் என்று ஆசைப்படுவார். ஒரு சமயம் கொல்கத்தாவில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அந்த போட்டியில் நானும், விராட் கோலியும் கலந்து கொண்டு ஆடினோம். மறுநாள் விராட் கோலி துடுப்பாட்டம் செய்ய வேண்டும். ஆனால், அன்று இரவு முழுவதும் அவர் பார்ட்டியில் ஜாலியா இருந்தார். ஆனால், மறுநாள் களத்தில் கோலி இறங்கியதும் 250 ஓட்டங்கள் அடித்தார். எனக்கு அப்படி ஷாக்காகிவிட்டது.
என்னடா.. இரவு முழுவதும் பார்ட்டியில் டான்ஸ் ஆடிவிட்டு, எந்த களைப்பும் இல்லாமல் இப்படி ஓட்டங்களை அடித்து வெளுத்து வாங்குகிறாரே என்று நினைத்தேன்.
அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியை நான் அருகில் பார்த்திருக்கிறேன்.
உணவு சாப்பிடுவதில் கவனமுடன் இருப்பார். அவருடைய மனம், கிரிக்கெட் வேறலெவலுக்கு சென்றது. சச்சின் எப்போதுமே ஒன்று சொல்வார்.
நம்பிக்கை என்பது வார்த்தை கிடையாது. அது உணர்வு என்று. விராட் கோலி என்றால் அவருடைய அகராதியில் நம்பிக்கை என்ற வார்த்தை இல்லை. அது தன்னம்பிக்கை தான் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |