டி20 புதிய தரவரிசை பட்டியல்! டாப் 10ல் இருந்து வெளியேற்றப்பட்ட விராட் கோலி
டி20 கிரிக்கெட்டுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடத்தகுந்த பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வரலாறு காணாத சறுக்கலை கண்டுள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும், இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலானும் உள்ளனர்.
மேலும் மூன்றாவது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம், நான்கு மற்றும் ஐந்து இடங்களில் ரிஸ்வான் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இப்பட்டியலில் விராட் கோலி 657 புள்ளிகளுடன் 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
எப்போதும் டாப் 10ல் இடம்பிடிக்கும் விராட் கோலி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.