கைக்கு வந்த ரன் அவுட் வாய்ப்பை இப்படியா தவற விடுவது? கோலியின் செயலால் கடுப்பான மேக்ஸ்வெல்... வைரலாகும் வீடியோ
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி தோற்ற நிலையில் எளிதாக ரன் அவுட் செய்யும் முக்கிய வாய்ப்பை கோலி தவறவிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் ஹைதராபாத் அணி கடைசி பந்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது கோலி முக்கியமான ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டார்.
போட்டியின் 16-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சஹால் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட ஹைதராபாத் விக்கெட் கீப்பர் சாஹா மிட் விக்கெட்டில் தட்டிவிட்டு சிங்கிளுக்கு ஓடினார்.
— No caption needed (@jabjabavas) October 6, 2021
ஆனால் அந்த இடத்தில் ஃபீல்டர்கள் யாரும் இல்லாததால், உடனே இரண்டாவது ரன்னுக்கு ஓடினார். இதைப் பார்த்த மேக்ஸ்வெல் பந்தை எடுத்து வேகமாக சஹாலிடம் வீசினார்.
ஆனால் அப்போது திடீரென ஓடி வந்த விராட் கோலி, பந்தை பிடித்து ரன் அவுட்டாக்க தவறவிட்டார்.
இதனால் மேக்ஸ்வெல் அதிருப்தி அடைந்து தனது முகபாவனையை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பான வீடியோ சமூவலைதளங்களில் வைரலாகியுள்ளது.