அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த அவுஸ்திரேலியா! சாதனை படைத்த கோலி
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலி அரைசதம் விளாசி சாதனை படைத்தார்.
ரோகித் அதிரடி
அகமதாபாத்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடந்து வருகிறது.
இந்திய அணி முதலில் துடுப்பாட்டம் செய்து வரும் நிலையில், நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளது.
ரோகித் சர்மா அதிரடியாக ஆட்டத்தை தொடங்க, கில் 4 ஓட்டங்களில் ஸ்டார்க் ஓவரில் அவுட் ஆனார். அதன் பின்னர் விராட் கோலி களமிறங்கினார்.
ரோகித் - கோலி பார்ட்னர்ஷிப் சீராக சென்று கொண்டிருந்தது. சிக்ஸர் (3), பவுண்டரி (4) என விளாசிய ரோகித் 47 (31) ஓட்டங்களில் இருந்தபோது மேக்ஸ்வெல் ஓவரில் டிராவிஸ் ஹெட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கோலி சாதனை
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ஓட்டங்களில் கம்மின்ஸ் ஓவரில் வெளியேறினார். இதனால் இந்திய தடுமாற்றத்தை சந்தித்தது. எனினும் பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுல் தடுப்பாட்டத்தை கடைபிடித்தார்.
மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 56 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் அவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
A quality knock in the final from the King. ?#ViratKohli #Cricket #INDvAUS #CWC23 #Sportskeeda pic.twitter.com/Cdgf7jze34
— Sportskeeda (@Sportskeeda) November 19, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |