விராட் கோலி ஒருநாள் சாதனைகள்: எந்த அணிகளுடன் எத்தனை சதங்கள்? முழு விவரம்
அதிக சதமடித்த வீரர் என்ற சச்சின் சாதனையை மிக குறைந்த இன்னிங்ஸில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமன் செய்துள்ளார்.
சச்சின் சாதனை சமன் செய்த விராட் கோலி
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னுடைய 49வது சதத்தை பூர்த்தி செய்து, அவருடைய ரோல் மாடலான சச்சின் சாதனையை நேற்று சமன் செய்துள்ளார்.
விராட் கோலியின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், அவரது இந்த சாதனை ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை வழங்கி உள்ளது.
விராட் கோலி சாதனைகள்
ஜாம்பவான் சச்சின் தன்னுடைய 452 இன்னிங்ஸில் 49 சதத்தை விளாசி இருந்த நிலையில், விராட் கோலி அதிவேகமாக 227 ஒருநாள் இன்னிங்ஸிலேயே 49வது சதத்தை கடந்துள்ளார்.
2012ம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி 183 ஓட்டங்கள் குவித்தது, அவரது ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸில் அதிகபட்ச ஓட்டமாகும்.
மொத்தமாக அவர் 13,626 ஓட்டங்கள் குவித்துள்ளார், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிவேகமாக 52 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
எந்த அணிக்கு எதிராக எத்தனை சதங்கள்
2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் தனது முதல் ஒருநாள் சதத்தை விராட் கோலி அடித்தார்.
அதை தொடர்ந்து இலங்கை அணியுடன் (10), மேற்கிந்திய தீவுகள்(09), அவுஸ்திரேலியா(08), வங்கதேசம்(05), நியூசிலாந்து(05), தென்னாப்பிரிக்கா(05), இங்கிலாந்து(03), பாகிஸ்தான்(03) ஜிம்பாப்வே(01) என மொத்தம் 49 சதம் இதுவரை அடித்துள்ளார்.
அவற்றில் 23 சதங்கள் சொந்த மண்ணிலும், 21 எதிரணி மண்ணிலும், 05 சதங்கள் பொதுவான மண்ணிலும் விராட் கோலி அடித்துள்ளார்.
விராட் கோலி சராசரியாக 5.65 இன்னிங்ஸ்க்கு ஒரு சதத்தை அடித்து அசத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |