அனைத்தையும் விட எனக்கு எனது வாழ்க்கைத்தரம் முக்கியம்: விராட் கோலி பேட்டி
என்னால் நிறைய காரியங்கள் செய்யமுடியும் என்று எனக்கு தோன்றினாலும், எனக்கு ஈடுபாடு ஏற்படாவிட்டால் அதை செய்யமாட்டேன் என இந்திய அணியின் விராட்கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் மற்றும் IPLலில் பெங்களூரு அணியின் கேப்டன் என்ற அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விராட்கோலி விளக்கியுள்ளார். இந்தநிலையில் பெங்களூரு அணியின் பேட்டி ஒன்றை அளித்துள்ள விராட்கோலி இதுகுறித்து பதிலளித்துள்ளார்.
அந்த பேட்டியில் என்னுடைய வாழ்க்கையில் நான் நானாக இல்லாவிட்டால் என்னுடைய விளையாட்டிலும் நான் நானாக இருக்கமுடியாது.
என்னால் அதிகமான காரியங்களை செய்யமுடியும் என்று நான் நம்பினால் கூட அதற்கான ஈடுபாடு எனக்கு தோன்றவில்லை என்றால் அந்த செயலில் நான் ஈடுபடமாட்டேன்.
ரசிகர்களுக்கு வீரர்கள் மீது அதித எதிர்பார்ப்புகள் இருக்கலாம் ஆனால் அதை நாம் கட்டாயம் பண்ணவேண்டும் என்பது இல்லை. வேண்டுமென்றால் அவர்களிடம் நிலைமையை விளக்கி கூறுவேன்.
இவற்றில் முக்கியமானது என்னவென்றால் உங்கள் சூழலில் இல்லாத யாராலும் உங்கள் முடிவுகளை புரிந்துகொள்ள முடியாது. எனக்கு எனது வாழ்க்கைத்தரம் மிக முக்கியம், அதேசமயம் எனது விளையாட்டும் மிக முக்கியம்.
உங்கள் வேலையில் எண்ணிக்கையின் மீது உங்கள் முக்கியத்துவத்தை செலுத்தினால் நீங்கள் விரைவில் சோர்ந்துவிடுவீர்கள். கடைசியில் எண்ணிக்கையை விடவும் தரம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றுவரை நான் நானாக இருப்பதால் தான் எனது நண்பர்கள் குடும்பம் என அனைவருடனும் தொடர்பில் இருப்பது சாத்தியமாகிறது என தெரிவித்துள்ளார்.