இந்தியர்கள் யாரும் செய்யாத சரித்திரம் படைத்த விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி, டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் அடித்த முதல் இந்தியர் எனும் வரலாறு படைத்தார்.
51வது ஐபிஎல் அரைசதம்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் விராட் கோலி 49 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்தார். இது அவரது 51வது ஐபிஎல் அரைசதம் ஆகும்.
First home game of the season ✅
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 25, 2024
First fifty of the season ✅
51st fifty in IPL#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvPBKS @imVkohli pic.twitter.com/FqHevUNJUt
239 ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி 7 சதங்களுடன் 7361 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 237 சிக்ஸர்கள் அடங்கும்.
முதல் இந்திய வீரர்
அத்துடன் டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் மற்றும் சர்வதேச அளவில் 3வது வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்தார்.
மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் 110 அரைசதங்களுடனும், அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 109 அரைசதங்களுடனும் இப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
மேலும் ஐபிஎல் வரலாற்றில் 650 பவுண்டரிகள் (4s) மைல்கல்லை எட்டிய 3வது வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றார்.
Only the third cricketer ever to reach this milestone ??
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 25, 2024
651* now ??#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvPBKS @imVkohli pic.twitter.com/8kGEs7vGoC
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |