மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன்! வெளிப்படையாக கூறிய விராட் கோலி
பலவீனமாக இருப்பதை ஒப்புக்கொள்வதை விட வலிமையானவர் என்று போலியாக இருப்பது மிகவும் மோசமானது - விராட் கோலி
மனரீதியாக தாழ்வாக உணர்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படவில்லை என கூறிய கோலி
மனரீதியாக வீழ்ச்சி அடைந்ததாக உணர்வதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச சதம் அடிக்கவில்லை. மேலும், அவர் ஓட்டங்களை குவிக்க தடுமாறி வருகிறார்.
இதனால் அவர் பலதரப்பட்ட விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோலி, கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக, ஒரு மாத காலமாக தனது பேட்-ஐ தொடவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'நான் மனரீதியாக தாழ்வாக உணர்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படவில்லை. இது மிகவும் சாதாரணமாக உணரக்கூடிய விடயம். ஆனால் நாம் தயக்கத்தினால் இதுகுறித்து பேசுவதில்லை.
நாம் மனரீதியாக பலவீனமாக பார்க்கப்படுவதை விரும்பவில்லை. என்னை நம்புங்கள், பலவீனமாக இருப்பதை ஒப்புக்கொள்வதை விட வலிமையானவர் என்று போலியாக இருப்பது மிகவும் மோசமானது' என தெரிவித்துள்ளார்.