அவர்களை நினைத்து பிரார்த்தனை செய்கிறேன்: முதல்முறையாக மௌனம் கலைத்த கோஹ்லி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த சோகம் குறித்து விராட் கோஹ்லி மௌனம் கலைத்துள்ளார்.
சோகம் சம்பவம்
2025 ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்வதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் நட்சத்திர வீரரான விராட் கோஹ்லி (Virat Kohli) எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தற்போது அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது சோகத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
பிரார்த்தனை
குறித்த அறிக்கையில், "ஜூன் 4ஆம் திகதி போன்ற ஒரு துயரத்திற்கு வாழ்க்கையில் எதுவும் உங்களைத் தயார்படுத்தாது. நமது ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருக்க வேண்டியது சோகமாக மாறியது.
நாம் இழந்த மற்றும் காயமடைந்த ரசிகர்களின் குடும்பங்களுகளை நினைத்து நான் பிரார்த்தனை செய்து வருகிறேன்.
உங்கள் இழப்பு இப்போது நமது கதையின் ஓவர் பகுதி. நாம் ஒன்றாக அக்கறை, மரியாதை கொண்டு பொறுப்புடன் முன்னேறுவோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |