துரதிர்ஷ்டவசமாக அவுட்டான கோஹ்லி! நொடிப்பொழுதில் கேட்ச் பிடித்த ஜோ ரூட்டின் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி இரண்டாவது இன்னிங்சிலும் மோசமாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 416 ஓட்டங்கள் குவித்தது. பண்ட் 146 ஓட்டங்களும், ஜடேஜா 104 ஓட்டங்களும் விளாசினர். ஆனால் விராட் கோலி முதல் இன்னிங்சில் 11 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் இங்கிலாந்து 284 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதை தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியில் கோலி மீண்டும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
An absolute jaffa!! ?
— England Cricket (@englandcricket) July 3, 2022
Rooty's reactions ?
Scorecard/Clips: https://t.co/jKoipF4U01
??????? #ENGvIND ?? pic.twitter.com/IzNH1r5V1g
இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸின் பந்துவீச்சை கோலி எதிர்கொண்டபோது, பந்து பேட்டில் பட்டு கீப்பரிடம் சென்றது. ஆனால் கீப்பரின் கையில் பட்டு தவறியபோது, ஸ்லிப்பில் நின்றிந்த ஜோ ரூட் நொடிபொழுதில் ஒற்றை கையில் கேட்ச் செய்து மிரட்டினார்.
இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் கோலி வெளியேறினார். அவர் 40 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.