300வது போட்டியில் கோஹ்லி அதிர்ச்சி அவுட்! தலையில் கை வைத்த மனைவி அனுஷ்கா..வைரல் வீடியோ
விராட் கோஹ்லி ஆட்டமிழந்ததால் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா அதிருப்தியடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
300வது போட்டி
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி முதல் விக்கெட்டுக்கு களமிறங்கினார்.
அவருக்கு இது 300வது போட்டி என்பதால், ரசிகர்கள் அவர் பெரிய ஸ்கோர் அடிப்பார் என ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
கோஹ்லி 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹென்றி ஓவரில் ஆப்சைடில் ஷாட் அடிக்க, கிளென் பிலிப்ஸ் ஸ்பைடர்மேன் போல் பறந்து ஒற்றை கையால் கேட்ச் செய்தார்.
Another Stunner catch from Glenn phillips in icc to dismiss virat Kohli #ViratKohli #ViratKohli𓃵 #INDvsNZ pic.twitter.com/2lf86dTITC
— Bittu Yadav (@Priteshkryadav5) March 2, 2025
அனுஷ்கா ஷர்மா வருத்தம்
இதனால் விராட் கோஹ்லி (Virat Kohli) உறைந்து நிற்க, அவரது ரசிகர்கள் அதிர்ச்சியுடன் அமைதியாகினர்.
அதே சமயம், பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்த கோஹ்லியின் மனைவி அனுஷ்கா ஷர்மா தலையில் கை வைத்து அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதற்கிடையில், ஒருநாள் கிரிக்கெட் 300 போட்டிகளில் விளையாடிய 7வது வீரர் எனும் பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |